அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரின் கைத்தொலைபேசியினுள் ஊடுருவி தகவல்களை கையாள, அமெரிக்க சட்ட வல்லுனர்களுக்கு உதவ முடியாது என ஆப்பிள் மறுப்பு தெரிவித்திருந்தது.

ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த முடிவிற்கு, சமுகவலைதளமான ஃபேஸ்புக் வெளிப்படையாக தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

சயிட் ரிஸ்வான் ஃபாருக் மற்றும் அவரது மனைவி ஆகியோர், டிசம்பரில் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

இரகசியக்குறியீடு மூலம் லாக் செய்யப்பட்டுள்ள குறித்த கைத்தொலைபேசியை, அமெரிக்க புலனாய்வு துறையிர் ஊடுருவி கையாள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

கைத்தொலைபேசியை திறப்பதற்கு எஃப்.பி.ஐ பிழையான இரகசியக் குறியீட்டை 10 தடவைகள் பயன்படுத்தி முயற்சித்தால், அந்த கைத்தொலைபேசியில் உள்ள தரவுகள் அழிந்துபோய்விடும்.

துப்பாக்கிதாரி சயிட் ரிஸ்வான் ஃபாருக்கின் கைத்தொலைபேசியை திறப்பதற்கு, தமது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உதவுமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஆப்பிள் நிறுவனத்திற்கு பிறப்பித்திருந்த உத்தரவை ஆப்பிள் மறுத்துள்ளது.

இது ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடும் என ஆப்பிள் வாதிட்டுள்ளது.

Facebook Comments