மூத்த  அரசியல் வாதியும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ.ஆனந்தசங்கரியின் நீங்கள் அறிந்தும்  அறியாததும் நூல் வெளியீடுநேற்று   சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு (20-02-2016) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி கிளைத் தலைவர் த.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் சிறப்புரையினை தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தியோடு, ஆசியுரையினை அருட்தந்தை துரைரட்ணமும், வாழ்த்துரையினை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளை செயலாளர்  கவிஞர் பொன் காந்தனும் நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து நூலின் முதற்  பிரதியை அருட் தந்தை துரைரட்ணம் வெளியிட்டு வைக்க தமிழருவி த.சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஏனையவர்களுக்கான பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஏற்புரையினை வீ. ஆனந்தசங்கரி ஆற்றியனார்.

அவர் தனது உரையில் தன் மீது சுமத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான திட்டமிட்டு திரிபுபடுத்திய செய்திகளை பரப்புரை செய்தமையினால் தான் அதனை ஆதாரபூர்வமாக  இந்த நூலின்  மூலம் மறுத்துள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் பேசிய விடயங்கள் பாராளுமன்ற ஹன்சாட்டில் இன்றும் எடுத்து பார்க்க முடியும் என்றும், அதுவே தனது அர்ப்பணிப்பு மிக்கசேவைக்கு ஆதாரம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த கால வரலாற்று பதிவுகள் பல தற்போது மறைக்கப்பட்டு விட்டது என்றும் எனவே அவற்றை பதிவு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது எனவும் தெரிவித்தார்._MG_2327 copy _MG_2329 copy _MG_2332 copy _MG_2343 copy _MG_2348 copy _MG_2349 copy

Facebook Comments