தண்டப்பண பற்றுச்சீட்டை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததால் தண்டனை.

அத்துடன் குறித்த நபரின் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் தற்காலிக அனுமதிபத்திரம் ஒன்றினையும் வழங்கியுள்ளனர்.

எனினும் தண்டப்பண பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட குறித்த நபர் அந்தப் பற்றுச்சீட்டினை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியதுடன் ”நண்பர்களே செய்யாத குற்றத்திற்காக என்னுடைய வாகன அனுமதிப்பத்திரத்தை கந்தக்கெட்டிய பொலிஸார் பறித்துவிட்டனர் தற்போது என்னிடம் இருப்பது இதுவே” என்று பதிவேற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமது பொலிஸ் நிலைய பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த நபரை கைது செய்ததுடன் சந்தேக நபருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கிணை விசாரணைக்கு எடுத்த பதுளை மாவட்ட நீதவான் நீதிபதி ஆர்.எம்.ஜீ.சீ.ராஜபக்ஸ குறித்த சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும், ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யததுடன் இந்த வழக்கு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

Facebook Comments