கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்   35 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாயசோதனயைத்தருவதும்  மக்களின் வேதைனையாக கருதப்படும் கழிவாற்று உடைப்பு அண்மைக்கால மழையினால் அதிகளவில் சிறு மழைக்கே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது.

 பெரியளவிலான நான்கு கிராம சேவகர் பிரிவினையும் அதிகளவான கிராமங்களுக்கான பிரதான பிரயாண மார்க்கமாகவும் உருத்திரபுரம் காணப்படுகின்றது. இதில் பிற இடங்களில் காணப்படும் நான்கு பிற குளங்களினது நீரும் புதுமுறிப்பு விவசாய நிலங்களின் வடிநீரும் மேலதிக நீரும், நீரேந்தல் ஊடாக கிடைக்கும் நீரும் சேர்ந்து உருத்திரபுர மக்களை இன்னல்களுக்குள்ளாக்கி வருகின்றது.
 அன்றாட மக்களின் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மழைகாலங்களில் மக்களின் இடம்பெயர்வும் சில சந்தர்ப்பங்களில் அபாயங்களும் நிகழ்ந்துள்ளது குறிப்பாக கடந்த வருடத்திற்கு முதல் வருடம் ஒன்றரை வயது குழந்தை நீரோடு அடித்துச்செல்லப்பட்டு 250 மீற்றருக்கப்பால் மீட்டெடுத்து கடவுள்செயலால் குழந்தை உயிர் மீட்கப்பட்டது. சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறும் உருத்திரபுர பிரதேசமும் குறிப்பாக உருத்திரபுர 5ம் வீதியே முதலில் பாதிப்பை எதிர் கொள்வதுடன் பாரிய சேதத்தையம் கொண்டள்ளது
. மழை வர மக்களின் கூக்குரலுக்கு அதிகாரிகள் சற்று அசைவதும் மழை வடியும் வரை பொறுமைகாத்து மெளனமாகி விடுகின்றார்கள். எனவே மக்களின்  கேள்விகள் பலனற்றதால் மக்கள் நீதி தேடி வெளியே வர முற்படுகின்றார்கள் எனவே மக்களுக்கான உடனடித்தீர்வை  எதிர்பார்க்கின்றார்கள்.
மக்கள்  கருத்துக்கூறுகையில்
அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் உருத்திரபுரக் கிராமம்
  கிளிநொச்சியின் பிரதான வீதியின் மேற்கு திசையில் சுமார் 10km  தெலைவில் உருத்திரபுர கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தின் பிரதான வீதிக்கு தெற்கு பக்கமாக உருத்திரபுரம் D8 , உருத்திரபுரம்
D10. சிவநகர் ஆகிய கிராமங்கள் காணப்படுகின்றது. இக்கிராமங்களுக்கு தெற்குப் பகுதியில்
கிராமத்தை வெள்ளத்திலிருந்து காக்கும் அரணாக பாரிய கழிவாறும், அரணும் காணப்படுகின்றது.
இவ் கழிவாறும் அரணும் சுமார் 35வருடங்களுக்கு மேலாக எந்த அதிகாரிகளினதும் செயற்பாட்டிற்கும் உள்வாங்கப்படவில்லை. மக்கள் கையெழுத்திட்டு மனுக்கள் கொடுத்தும் பாராமுகமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தட்டிக்கழிக்கும் ஓர் விடையமாக காணப்படுகின்றது. இவ் கழிவாற்றை செப்பநிடாது இன்றுவரை மழை காலத்தில் இம் மூன்று கிராமமும் மூன்று பெரும் குளங்களின் நீரினால் மூழ்கடிக்கப்படுகிறது. மழைகாலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கும் நிலையும்,உயிர் அனர்த்தம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களும் இடம் பெற்றுள்ளது.குறுக்கு வீதிகள் அனைத்தும் இரு தசாப்தத்திற்கு மேலாக கவனிப்பாரற்று விடப்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பாரியளவில் அரிப்புக்குள்ளாகி மக்கள் பாவனைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.
  கந்தன் குளம், புதுக்குளம், புதுமுறிப்புக்குளங்களின் வான்பாயும் நீரையும்;, பயிர்ச்செய்கை நிலங்களிலிருந்து வரும் மேலதிக நீரையும்; இவ் வாய்க்காலே மக்களின் குடிமனைக்கு பாதுகாப்பளித்து நீரைக்கடத்தும் முக்கிய அரணாக காணப்படுகின்றது. இதனையே கழிவாறு என்கின்றார்கள். இந் நீர் இக் வாய்க்கால்; மூலம் உருத்திரபுரக் குளத்தை ; சென்றடையும். ஆனால் இது இன்று உருத்திரபுரக்கிராமத்தையே அடியோடு அழிக்கும் நிலையில் உள்ளது.  கந்தன் குளத்திலிருந்து ஆரம்பிக்கும் இக் கால்வாய் உருத்திரபுர குளம் வரை 7Km தூரம் உள்ளது. மேற்கு பகுதியில் வரும் மழை நீரும் இதில்த்தான் வந்து சேருகின்றது.  முறிப்புக்குளத்தின் நீர் கொள்ளளவு 7அடியாக இருந்த போதும் இக்கிராமம் தொடர்பாக எதுவித முயற்சியும் மேற்கொளளப்படவில்லை தற்பொழுது 17அடி உயர்த்தப்பட்டும் யாரும் பாராமுகமாக இருக்கின்றது. இரு இடங்களில் உடைப்பு எடுத்து கிராமங்களின் ஊடாக அறுத்தோடி கிராமங்களின் ஒரு பகுதியை மாரிகாலத்தில் வெள்ளத்தில் காணலாம். 35வருடங்களுக்கு மேலாக இந்த பரிதாப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவும்
  பலகாலங்களாக  அவதிப்படும்  எமக்கு  இவ்  அணைக்கட்டை  சீராக  கட்டித்தருமறும்   இனிவரும்  மழை  காலங்களிலாவது  எமது  வீடுகளில்  நாம்  நிம்மதியாக  இருக்க  ஆவனை செய்து தருமாறும்  வேண்டு  கின்றனர்
எஸ் . என் . நிபோஜன் ​1 2 3 4 5 6 7 8 9
Facebook Comments