கிளிநொச்சியில்  நாளை  பூரண  கர்த்தாள்: வரத்தக  சங்கம்  அழைப்பு
கிளிநொச்சி  மாவட்டத்தில்  நாளையதினம்  கர்த்தாள்  அனுஸ்டிக்கப்பட  உள்ளதாகவும்  அனைத்து   கிளிநொச்சி  வர்த்தகர்களையும்  நாளைய தினம்  முழுநேர  கதவைப்பு  செய்து  பூரண  கார்த்தாளை  அனுச்டிக்குமாறு  கிளிநொச்சி நகர்   வர்த்தகர்சங்கம்  அழைப்பு  விடுத்துள்ளது 
அன்மைக் காலமாக  சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து  வருகின்றது
சிறுவர்களை பாடசாலைகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்புவதற்கு பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அதிகம் அச்சப்படக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான கொடூர பாலியல் வன்புணர்வுகளும், அதன் பின்னரான கொலை சம்பவங்களும் அதிகம் பதிவாகிய வண்ணம் உள்ளன.
மாணவி வித்தியாவின் கொலை. அதனையடுத்து கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமியும், தற்போது வவுனியா மாணவி ஹரிஸ்ணவியும் என சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்படுவது தொடர் கதையாய்  தொடர்கிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்படைவதோடு  எமது  எதிர்ப்பையும்  காட்ட  இதுதான்  நேரம்  எனவே  நாளையதினம்  கிளிநொச்சியில்  உள்ள  அனைத்துகடைகளையும்  அடைத்து  எமது  எதிர்ப்பை  தெரிவிப்போம்  என  கிளிநொச்சி   நகர்  வர்த்தக  சங்கத்தினர்  அழைப்பு  விட்டுள்ளனர்
Facebook Comments