கிளிநொச்சியில்  வவுனியா  மாணவி  வன்புணர்வின்  பின்  கொலை செய்யப்பட்டமைக்கு   கண்டனம்  தெரிவித்து  ஆரப்பாட்டம்  ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று ஒன்பது  மணியளவில்  கிளிநொச்சி  பொது  சந்தை வர்த்தகர்களின்  ஏற்பாட்டில்  கிளிநொச்சி சந்தையில்  இருந்து ஆரம்பிக்கப்பட்ட  இவ் ஆர்ப்பாட்டமானது
 இருப்பவர்கள்  இருந்தால் இதுவெல்லாம்  நடக்குமா
அடுத்தடுத்து  குற்றம்  என்ன செய்கிறது சட்டம்
அரசாங்கமே  பெண்களுக்கு  பாததுகாப்பு  கொடு
நேற்று வித்தியா,சேயா
இன்று ஹரிஸ்ணவி நாளையும் தொடருமா?!
 பெண்கள் – சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லையா…?!
 அரசே சட்டத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு அதியுச்ச பாதுகாப்பை
வழங்கு!
 சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வும், கொலையும் தொடர்கதையா…?!
 சிறுவர் துஸ்பிரயோகத்தை எதிர்ப்போம்! தடுப்போம்!
 பெண்கள் மீதான வன்முறையாளரை தண்டிப்போம்!
 சிறுவர்களை  பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்கு!
 பாலியல் வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்து!
 என்ற  பல்வேறு  வாசகங்களை  தாங்கிய  வாறும் கோசம்  எழுப்பிய  வாறும்  கிளிநொச்சி  மாவட்ட  செயலகம்  வரை  சென்று  கண்டன  மனுவை  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயத்திடம்  கையளித்தனர்
 குறித்த  கண்டன  மனுவில்  இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என வார்த்தைகளில் மட்டும் கூறி விட்டு அவர்கள் மலர்களாக மலரும் முன்னமே

மொட்டுகளிலேயே கிள்ளி எறியும் துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கை வாழ் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில்
அன்மைக் காலமாக  சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம் பெற்று வருவதனை அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறிந்து
கொள்கின்றோம்.
ஆனாலும் அண்மை காலங்களில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதானது எல்லோரையும் அச்சத்தில்
ஆழ்த்தியுள்ளது சிறுவர்களை பாடசாலைகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்புவதற்கு பெற்றோர்களும்,
பாதுகாவலர்களும் அதிகம் அச்சப்படக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான கொடூர பாலியல் வன்புணர்வுகளும், அதன் பின்னரான கொலை சம்பவங்களும் அதிகம் பதிவாகிய
வண்ணம் உள்ளன. இதில் மிகவும் கண்டனத்திற்கும், அனைத்து சமூகத்தினரினதும் கொந்தளிப்புக்கும் உட்பட்ட விடயமாக யாழ்
மாணவி வித்தியாவின் கொலை. அதனையடுத்து கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமியும், தற்போது வவுனியா மாணவி
ஹரிஸ்ணவியும் என சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்படுவது தொடர் கதையாய்  தொடர்கிறது.
மேலும் திருகோணமலை சம்பூரில் ஆறு வயது சிறுவன் பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு கல்லில்
கட்டபட்டு கிணற்றில் போட்ட சம்பவமும், 10 வயது சிறுவன் ஒருவனை அத்துருகிரிய பகுதியில் படுகொலை செய்துள்ள
சம்பவமும், பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் 9 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை என
சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக்கியுள்ளது.
இந்த நிலைமை இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளமை எல்லோரினதும் மத்தியில் அச்சத்தினை
தோற்றுவித்துள்ளது. இன்று சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வன்புணர்வு, ஆபாச படங்களை காட்டுவது,
ஏமாற்றுதல், கடத்தல், கொலை செய்தல் போன்ற கொடூரங்கள்  சர்வசாதாரணமான நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்
பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் அடுத்து சேயாவின் கொலைக்கும் பத்து வயது
சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது. இத்தகைய கொடூரமான
சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான
சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?
இவ்வாறு சிறுவர்கள் மீதான கொடூர பாலியல் வன்புணர்வு மற்றும் கொடூர கொலை, துன்புறுத்தல்கள் இடம் பெற போதை
பொருள் பாவனையும், ஆபாச இணையத்தளங்களும்,  பிரதான அம்சமாக மாறியுள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவதில்
அரச செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இவ்விடயங்களில் அரசாங்கம் அசமந்த போக்கிலேயே
செயற்படுகிறது.
நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்த எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டங்கள்
கடுமையானதாக இன்மையால் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாட்டின் சட்டமும,; பாதுகாப்பும்
காணப்படுகிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்படையுங்கள்! ஹரிஸ்ணவியோடு பெண்கள், சிறுவர்கள்
மீதான இந்த கொடூரங்கள் முடியட்டும். என  குறிப்பிடப்பட்டிருந்தது
ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஊடகங்களிற்கு  கருத்து தெரிவிக்கையில்  தொடர்ந்து  கொண்டுள்ள இக்  குற்றச்செயல்கள்   நிறுத்தப்பட வேண்டும்  எனவும்   விடுதலைப்புலிகளின்  ஆட்சிக்காலத்தில்  இவ்வாறான  செயட்பாடுகள்  குறைவாகவே இருந்தது எனவும்  அப்படி குற்றம் இழைப்பவர்களுக்கு அவர்கள்  மரண தண்டனையை  வழங்கி  இருந்தார்கள்  அவாறான  சட்டங்களை  இலங்கை  அரசாங்கம்  கொண்டுவந்தால்  மட்டுமே  இவ்வாறான  குற்றச்செயல்களை  தடுக்க  முடியுமென்றும்  வித்தியாவின்  கொலை  வழக்கிற்கு  ஒரு முடிவை  எடுத்திருந்தால்  இவ்வாறு   வன்புணர்வு மற்றும்  கொலைகள்  தொடர்ந்திருக்குமா என்ற  பல  கேள்விகளை  எழுப்புகின்றனர்
எஸ் . என் . நிபோஜன் _MG_2441 copy _MG_2447 copy _MG_2448 copy _MG_2451 copy _MG_2457 copy _MG_2464 copy _MG_2465 copy _MG_2466 copy _MG_2477 copy _MG_2484 copy
Facebook Comments