வவுனியாவின் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த கோரி  இன்று (புதன்கிழமை) ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இன்று காலை முதல் கிளிநொச்சியில் உள்ள  அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பேரூந்து சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும்  இருப்பினும் இலங்கை  போக்குவரத்து சேவையின்  ஒரு சில  பேரூந்துகள்  சேவையில்  இருப்பதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில், , கிளிநொச்சி  வணிகர் சங்கத்தினர்  ,  தனியார்  வங்கிகள்  மற்றும் கிளிநொச்சி  தனியார்  பேரூந்து  உரிமையாளர்  சங்கம்  என்பன   இணைந்துள்ளன.

எனினும், இன்றையதினம் வட மாகாணத்தின் எந்தவொரு பாடசாலையும் மூடப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்ட  போதும் . கிளிநொச்சியில்  மாணவர்கள்  எவரும்  சமூகமளிக்காத  நிலையில்  பாடசாலைகளும்  இயங்காமல்  உள்ளது

எஸ் என் நிபோஜன் IMG_2494 copy IMG_2498 copy IMG_2499 copy IMG_2502 copy IMG_2518 copy IMG_2521 copy

Facebook Comments