கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் இன்று  பிற்பகல்  ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து சிறுமியின் தந்தை   உடனே பொலிஸாருக்கு முறைப்பாடு  செய்யப்பட்டதை  அடுத்து கிளிநொச்சி பொலிஸார்   சந்தேகத்தின் பெயரில் தேடுதல் முன் எடுத்தபோது அவரது தாயாரால் ஆட்கள் வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டது  தெரியவந்தது..   தாயாருடன் கிளிநொச்சி பொலீஸார் தொடர்பு கொண்டு சிறுமியுடன் சென்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
 கடத்தல் சம்பந்தமாக மேலும் தெரியவருவது முன்பள்ளியில் இருந்து சிறுமி தாத்தாவுடன் ஊந்துருளியில் வருகை தந்தபோது பின்தொடர்ந்து வந்த சந்கே நபர்கள் ஊந்துருளியை தள்ளி விழுத்தி பின் சிறுமியின் தாத்தாவையும்  தாக்கி விட்டேசிறுமியை கடத்தி சென்றுள்ளனர் என  தெரிய  வருகின்றது  சிறுமியின்  தாத்தா  கிளிநொச்சி   வைத்திய  சாலையில்  சிகிச்சை  பெற்று  வருகின்றார்
குறித்த சம்பவமானது தந்தைக்கும்  தாயக்கும் ஏற்பட்ட  குடும்ப்ப பிணக்கு காரணமாக கடந்த ஜந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாய் முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்திலும் தந்தை கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திலும் வசிக்கின்றனர். சிறுமி தந்தையுடன் விசித்து வந்துள்ளார். இதனாலையே  சிறுமி  கடத்தப்பட்டுள்ளார்  என  தெரிய  வருகின்றது
குறித்த சம்பவம்  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  கிளிநொச்சி  போலீசார்  மேற்கொண்டு  வருகின்றனர் 
 
எஸ் . என் . நிபோஜன் ​_MG_0110 _MG_0111
Facebook Comments