யாழ்பாணம்  கரவெட்டியை  சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கிளிநொச்சி  155 ம் கட்டை  பகுதியில்  உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் என்பவர் இன்று காலை மாதாந்த பணத்தை பெறுவதற்காக மல்லாவி  சென்றுள்ளார்.

குறித்த இடத்துக்கு பணத்தை வசூலிக்கச் சென்ற நபருக்கு அடி விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரணத்திற்கான உடனடிக் காரணம் இது வரை தெரியவில்லை. அடிபட்டதனால்  இறந்ததாகவும்  அவர்  அருந்திய  குளிர்பானத்தில்  நஞ்சு  கலந்து  வழங்கப்பட்டதனால்   இறந்ததாகவும் உறுதிப்படுத்தாத  தகவல்கள்  தெரிவிக்கின்றன

இருப்பினும் இது தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது.

எஸ் . என் . நிபோஜன் ​

Facebook Comments