வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து  கடல் நீரை  குடிநீராக்கி  யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  யாழ்  வடமராட்சி  கிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமராட்சி கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் , தனியார்  பேருந்து  உரிமையாளர்கள்  சங்கம்  மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தாளையடி கடற்கரையில் இருந்து

எமது பிரதேசத்தை ஒருமுறையேனும் திரும்பிப்பார்’,

‘வடமாகாண சபையே! ஏன் எம்மை கொல்லத் துடிக்கின்றாய்?’

அரசியல்வாதிகளே தவறிழைக்காதீர்கள்’,

‘வடமராட்சி கிழக்கை ஒதுக்காதே’,

‘எமது வளங்கள் எமக்கு வேண்டும்’

அலை  அடிக்கும்  கடலில்  அனல் அடிக்க வைக்காதே

ஆசிய அபிவிருத்தி  வங்கியே  உயிர்ப்பலி  எடுக்கவா  பணத்தை  கொடுக்கிறாய்

ஆகிய கோசங்களைஎழுப்பிய  வாறும்  பதாதைகளை  ஏந்தியவாறும்  நடைபவனியாக  புறப்பட்டஆர்ப்பாட்டக்காரர்கள்  மருதங்கேணி பிரதேச செயலகம் வரையில் சென்று அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை  நடத்தியிருந்தனர்

கடல்நீரை நன்னீராக்கும் இந்தத் திட்டத்தினால் கடல் அதிகளவில் உப்பாவதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும்  மீன் பிடியையே  முற்றுமுழுதாக  நம்பி  வாழ்வாதார  தொழிலாக  செய்யும் ஐயாயி ரத்துக்கு  மேற்பட்ட  குடும்பங்கலளின் நிலை  என்னவாகும்  என்ற  பல  கேள்விகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஊடகங்களிற்கு  கருத்து  தெரிவிக்கும்  போது எழுப்பினர்

அத்தோடு நாம்  இத்திட்டத்திற்கு  எதிரானவர்கள்  அல்ல  ஆனாலும்  இலைங்கை  தீவில்  மக்கள்  செறிந்து  வாழுகின்ற எமது பிரதேசம்  தானா கிடைத்தது  எமது வாழ்வில்  மண்ணள்ளி  போடாமல் இத் திட்டத்தை  நிறுத்துங்கள்  எனவும்  முப்பத்தைந்து  வருடங்களுக்கு  மேலாக  அபிவிருத்தியே  கண்டிடாத  எம்  பிரதேச  வீதிகளையும்  அபிவிருத்தி  செய்து  தாருங்கள்  என்றும்  கேட்டுக்கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர்கள்  பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடியிருந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு  வழங்குவதற்கான மகஜர் ஒன்றினையும்  யாழ் மாவட்ட  அரசாங்க  அதிபருக்கு  வழங்குவதற்கான மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

எஸ் . என் . நிபோஜன் _MG_2751 copy _MG_2769 copy _MG_2784 copy IMG_2723 copy

Facebook Comments