கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்  இரண்டாம்  அமர்வு  இன்று கிளிநொச்சி  மாவட்ட  செயலக  கேட்போர்  கூடத்தில்   மூன்று  இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்  இரண்டாம்  அமர்வு  காலை ஒன்பது  மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது

மூன்று  இணைத்தலைவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டம் . வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில்இடம்பெற்றது  இவ்  இரண்டாம்  அமர்விற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து  கொள்ளவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது

கடந்த  ஜனவரி  மாதம்  நடைபெற்ற  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்  தொடராக  நடைபெற்ற  இக் கூட்டத்தில் கல்வி , போக்குவரத்து , மின்சாரம் , பனை , தென்னை  வளம் , நீர்  வடிகாலமைப்பு , போன்ற  பல  விடயங்கள்  ஆராயப்பட்டன  இருப்பினும்  பெருமளவிலான  விடயங்களுக்கு தீர்வுகள்  ஆராய்ந்து  தெரிவிப்பதாக  கூறப்பட்டது
இக் கூட்டத்தில்  வடக்கு மாகாண அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,  மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், , பசுபதிபிள்ளை,மாட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்

எஸ் . என் . நிபோஜன் _MG_2869 _MG_2872

Facebook Comments