மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனது துடுப்பாட்ட மட்டையை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்தியா வரும் போது எல்லாம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.

அதன் பின்னர் அவரது படங்களையும் அடிக்கடி பார்ப்பாராம். அவருக்கு பிடித்த படம் ‘ஷான்ஷா’ எனவும் கெய்ல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது கையெப்பமிட்ட துடுப்பாட்ட மட்டையை அமிதாப் பச்சனுக்கு பரிசாக அளித்துள்ளார் கெய்ல்.

இது பற்றி அவர் டுவிட்டரில் கூறுகையில், “ஜாம்பவான் அமிதாப் பச்சனுக்கு எனது ‘ஸ்பார்டான்’ துடுப்பாட்ட மட்டையை பரிசாக அளித்ததில் பெருமை அடைகிறேன். அவரது படங்கள், ஸ்டைல் என அனைத்து பிடிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமிதாப் பச்சன். “கெய்ல், என்ன ஒரு மரியாதை.. என்னை பற்றி உங்களுக்கு தெரியும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள்” என்று பதிலளித்துள்ளார்.

Facebook Comments