இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது பாகிஸ்தான்.

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடருக்காக பாகிஸ்தான் அணி முன்னாள் சகலதுறை வீரரான அசார் முகமதை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணிக்கு சிறந்த வழிகாட்டியை தேடி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவை அணியின் வழிகாட்டியாக நியமிக்க முடிவெடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷார்யார் கான் கூறுகையில், ஆமாம் உண்மைதான், நாங்கள் இலங்கையின் குமார் சங்கக்காராவை பரிசீலித்து இருக்கிறோம்.

ஆனால் இன்னும் அவரை நியமிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை. முதலில் அவரது வருகை அணிக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Facebook Comments