ஆசியக்கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் தலைவர் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா துடுப்பெடுத்தாடும் போது தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஆமிர் பந்துவீச்சில் மிரட்டினார்.

இதனால் 8 ஓட்டங்களுக்கே இந்தியா 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் யுவராஜ் (14), கோஹ்லி (49) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி கூறுகையில், ‘நாங்கள் ஆடுகளத்தை கணித்து செயல்பட தவறிவிட்டோம். ஆடுகளத்திற்கு ஏற்ப எங்களது ஆட்டம் அமையவில்லை.

ஆரம்பத்திலே விக்கெட்டுகளை அதிகமாக இழக்கும் போது சவாலான ஓட்டங்களை எடுப்பது என்பது இயலாத ஒன்று.

இது போன்ற ஆடுகளத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு கோஹ்லி தான் சிறந்த உதாரணம்” என்று கூறியுள்ளார்.

Facebook Comments