யாராலும் ஹேக் செய்ய முடியாத வகையில் ஐபோன்களை பாதுகாக்கும் வகையில் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பெர்னாடினோ நகரில் தாக்குதல் நடத்திய ரிஸ்வாஸ் என்ற இளைஞரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

அப்போது அவரது ஐபோனை கைப்பற்றிய பொலிசார் அதில் உள்ள தகவல்களை அறிந்துகொள்ள உதவும்படி அப்பிள் நிறுவனத்திடம் கேட்டது.

எனினும் இதற்கு அப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்நிலையில் தங்கள் ஐபோன்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக யாராலும் ஹேக் செய்ய முடியாத வகையில் மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மென்பொருள் மூலமாக ஒருவரின் ஐபோனை அவரது அனுமதி இல்லாமல் யாராலும் பயன்படுத்த முடியாது.

தற்போதைய ஐபோனை ஹேக் செய்யும் வசதி அப்பிள் நிறுவனத்துக்கு உள்ளது.

ஆனால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டால்  அப்பிள் நிறுவனத்தாலேயே ஒருவரின் ஐபோனின் ஹேக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments