கிளிநொச்சி மாவட்டத்தில்; சொந்தமாக காணியில்லாத  4220 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் மொத்தமாக மீள்குடியேறிய 41893 குடும்பங்களில் 4220 பேருக்கு காணிகள் இல்லை எனவும் அவர்களுக்கு காணிகள் வழங்க வேண்டும் எனவும் குறித்த புள்ளி விபரத் தகவல்களில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சியிலுள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் படி கரைச்சியில் 3160 குடும்பங்களும், கண்டாவளையில் 956 குடும்பங்களும், பூநகரியில் 72 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளியில் 32 குடும்பங்களும் சொந்த காணியின்றி காணப்படுகின்றனர்.
மேற்படி குடும்பங்கள்  சொந்த காணிகள் இன்றி வசிப்பதனால் அவர்கள் மீள் குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எதுவும் பெற முடியாதவர்களாக தொடர்ந்தும் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வீட்டுத்திட்ட உதவிகள் இன்றி  இருப்பது இவர்களது வாழக்கையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொதுக் காணிகள் பலவற்றை இன்றும் இரானுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments