வடக்கு மாகாணசபையால் அம்புலன்ஸ் சேவை செய்ய முடியுமென்றால் ஏன் அரசாங்கத்தால் முடியாது ?? என

அரச வைத்திய அலுவலர் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் _MG_3222கேள்வி  எழுப்பியுள்ளார் . நேற்று  செவ்வாய் கிழமை [01-03-2016] கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  கேள்வி  எழுப்பியுள்ளார்

 
அவர் மேலும்  தெரிவிக்கையில் 
 
வட மாகாணத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் அவசர நோயாளர் காவு வண்டி சேவை சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே வடக்கில் அவ்வாறு மேற்கொள்ள முடியும் என்றால் ஏன்  அரசாங்கத்தினால் அவ்வாறு மேற்கொள்ள முடியாது? அதற்கு நோயாளர் காவு வண்டி இல்லை என்றால் இந்தியாவிலிருந்து நோயாளர் காவு வண்டியை   பெற்றுக்கொள்ளலாம் அல்லது கடனாக நிதியை பெற்று குறித்த சேவையினை ஆரம்பிக்க முடியும.
; அதனை விடுத்து இந்திய நிறுவனம் ஒன்றுற்கு  சேவையினை வழங்கி அதனை இலங்கையில் செயற்பட அனுமதிப்பது ஏற்புடையது அல்ல எனவே இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எனவும் 
முன்னயை அரசாங்கம் சீபா எனும் பெயரில் இவ் ஒப்பந்தத்தை கொண்டு வந்தது ஆனால் நாட்டில் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. அத்தோடு அப்போது எதிர்கட்சியாக இருந்த தற்போதைய ஆளும் கட்சி அரசு அன்று சீபாவுக்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.

ஆனால் இன்று அதே ஒப்பந்தத்தை எக்டாவாக கொண்டு வருகின்றனர். இது இலங்கையின் மருத்துவதுறைக்கு மாத்திரமன்றி  தொழிநுட்பம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.

முக்கியமாக எக்டா மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள அவசர நோயாளர்  காவுவண்டி  சேவையின் மூலம் இந்தியாவிலிருந்து  மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் அனைத்து ஊழியர்களும்  இலங்கைக்கு வந்து பணியாற்றுவார்கள்.  இது இலங்கையின் வேலைவாயப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர்

குறித்த இந்திய நிறுவனத்தில் அவசர நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பிக்கும் போது அவர்கள் பயன்படு;த்தப் போகின்ற தொழிநுட்பம் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயமும் உண்டு எனவும்  மருத்துவர் ஹரித்த அலுத்கே குறிபிட்டுள்ளார்.

SN.NIBOJAN

T.P:0094766222409

    0094710122052

Thank You

Facebook Comments