‘கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவில், 8 ஆயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 592பேர் மீளக்குடியேறியுள்ளனர். இவ்வாறு மீள்குடியேறிய மக்கள், காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்’ என்று பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்தார். ‘கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட 16 கிராமசேவகர்  பிரிவுகளிலும் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் பல்வேறுபட்ட தேவைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அவர்களின் தேவைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காணிப் பிரச்சினையே பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது’ என்று அவர் மேலும் கூறினார்.

Facebook Comments