கிளிநொச்சியிலுள்ள குளங்களில், 4 குளங்களின் கீழ் 1,540 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘பூநகரி, குடமுருட்டிக்குளத்தின் கீழ் 330 ஏக்கரிலும் கரியாலை, நாகபடுவான் குளத்தின் கீழ் 500 ஏக்கரிலும் பிரமந்தனாறுகுளத்தின் கீழ் 450 ஏக்கரிலும் கனகாம்பிகைக்குளத்தின் 260 ஏக்கரிலும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தக் குளங்களின் கீழ் நெற்செய்கை மேற்கொள்வதற்கான சிறுபோக குழுக்கூட்;டம், மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். ‘இதனைவிட, பிரமந்தனாறிலும், கனகாம்பிகைக்குளத்திலும் முழுமையாக மேட்டுநிலத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கை இடம்பெறவுள்ளது. அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், கல்மடுக்குளம் ஆகிய குளங்களுக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம் விரைவில் இடம்பெறும்’ எனவும் அவர் தெரிவித்தார்

Facebook Comments