கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2016 ஆம் ஆண்டில் 231 வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 900.7 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பீட செய்யப்பட்டுள்ளதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு 122 மில்லியன் ரூபாயும், 20 விவசாய வீதிகளின் வேலைகளுக்கு 48.80 மில்லியன் ரூபாயும், 36 வாய்க்கால்களின் புனரமைப்பு வேலைகளுக்கு 88 மில்லியன் ரூபாயும், 16 நெற் களஞ்சியங்கள் அமைக்க 96 மில்லியன் ரூபாயும், கமநலசேவை நிலையத்துக்குரிய கட்டடங்கள் மற்றும் மாவட்டக் காரியாலயத்துக்கு கட்டடம் அமைத்தல் ஆகிய 18 வேலைத்திட்டங்களுக்கு 66 மில்லியன் ரூபாயும், 39 விவசாயக் கிணறுகள் அமைப்பதற்கு 157.50 மில்லியன் ரூபாயும், 27 உவர்நீர் தடுப்பணை வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 259.90 மில்லியன் ரூபாயும், 27 கமக்கார அமைப்புக்குரிய கட்டடங்கள் அமைப்பதற்கு 40.50 மில்லியன் ரூபாயும், கமக்கார அமைப்புக்களுடைய ஏனைய கட்டடங்கள் அமைக்கும் 8 வேலைத்திட்;டங்களுக்கு 22 மில்லியன் ரூபாயும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பின்னரான மக்கள் மீள்குடியமர்வையடுத்து, கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறிப்பிடத்தக்கது.

Facebook Comments