கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு, பொலிஸார் உடந்தையாகவும் சிலவேளைகளில் பாராமுகமாகவும் செயற்படுவதாகஅண்மையில்  நடைபெற்ற  கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

. இதன்போது கருத்துத் தெரிவித்த சிறிதரன் எம்.பி, ‘கிளிநொச்சியின் பல்வேறு இடங்களிலும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு கடிதம் எழுதியிருந்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுக்கவில்லை. மணல் கொள்ளை நடக்கின்றது என அறிவித்தாலும் பாராமுகமாக இருக்கின்றனர். திருவையாற்றுப் பகுதியில் பெருமளவான மணல் எடுக்கப்படுகின்றது. எவ்வாறு என்று விசாரித்தால் பொலிஸாரின் துணையுடன் நடக்கின்றது என தகவல் கிடைத்தது’ என்றார். இதற்கு பதிலளித்த பதில் பொறுப்பதிகாரி தரத்திலான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ‘காட்டுப்பகுதியில் மணல் கடத்தல் இடம்பெறுவதால் அங்கு சென்று கட்டுப்படுத்துவது முடியாமல் உள்ளது. மேலும் இரவு வேளைகளில் நடைபெறுவதால் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது’ என்றார். இதன்போது குறுக்கிட்ட அங்கஜன் இராமநாதன் எம்.பி, ‘இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். –
Facebook Comments