சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பெண்கள் அமைப்பினரால் இருண்ட  நாளாக   கறுப்பு பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 
இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்கள் கறுப்பு பட்டிகளை வாயில் கட்டியவாறு பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
இதன் போது அவர்கள் நீதிக்கான பயணம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அவர்களே பெண்கள் சிறுவர்கள் எதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சினையாக அறிவிக்க வேண்டும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு வரும் வகையில் விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டும், பெண்களுக்கு எதிராக வன்முறைகளுக்க சரியாக நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம், போன்ற பல்வேறு வாசங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்
இதனை தொடர்ந்து பழைய கச்சேரியிலிருந்து புதிய கச்சேரிக்கு ஊர்வலமாக சென்ற பெண்கள் அங்கு மேலதிக அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இதன்போது  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் 
பெண்களுக்கு  எதிரான  பாலியல்  வன்முறைகளும் கொலைகளும் ,சிறுவர்களுக்கெதிரான  பாலியல்  வன்முறைகளும் கொலைகளும் மிகவும்  மோசமான நிலையில்  நாடளாவிய  ரீதியில்  அதிகரித்து  வருவதாலும்  இந்த வன்முறைக்கான  நீதி  இதுவரைக்கும்  கிடைக்காததாலும்  நீதி கிடைக்கும் என்ற  நம்பிக்கை  அற்றுப்  போனதாலும்  பெண்களுக்கான தினமான பங்குனி  எட்டினையும்  முழு  மாதத்தினையும்  இருண்ட  நாளாக  பிரகடனப்படுத்துகிறோம்  எனவும்  சிறுவர்கள் பெண்களுக்கான  பிரச்சனைகள்  தேசிய  பிரச்சனைகளாக  மாற்ற  வேண்டும்  எனவும்  கேட்டுக் கொண்டனர் _MG_3312 _MG_3316 _MG_3319 _MG_3336 _MG_3341
Facebook Comments