கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்படி இன்று வியாழக்கிழமை  கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படடுள்ளது

 
கடந்த  பதினேழு நாட்களாக சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று  காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி புனித திரேசம்மா ஆலய முன்றலில் ஆரம்பமாகி கிளிநகா் பிள்ளையாா் ஆலயம்வரை சென்றடைந்து அதிலிருந்து மனிதசங்கிலி போராட்டமும் இடம்பெற்றது. இதனை தொடா்ந்து மத பிராா்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
 இந்த கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவா்கள்  சிங்கள சகோரா்களே எம் பிள்ளைகளின் விடுதலைக்கு வலுச்சேருங்கள். ஜனாதிபதி அவா்களே கைதிகளின் மீது கருணை காட்டுங்கள்.  நம் பிள்ளைகளின் விடுதலைக்காய் நல்லாட்சிக்கு வாக்களித்த நாம் தினம் தினம் நடுத்தெருவில் போராட்டத்தில்.தேசிய அரசாங்கமே தேர்தல் கால வாக்குறுதிகள் எங்கே? குழி தோண்டி புதைத்து விட்டீர்களா?,  மேற்படி இந்த போராட்டத்தை  கிளிநொச்சி சந்தை மற்றும் நகர வா்த்தக சங்கங்கள், தனியாா்  பேரூந்து சங்கம், பிரஜைகள் குழு, முச்சக்கர வண்டி சங்கம், ஆசிாியா் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதா் கிரைாம அபிவிருத்திச் சங்கங்கள், ஆலய அறங்காவலர் சபையினா்கள், உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்துகின்றன.இ்ந்தப் போரட்டத்தில் பாராளுமன்ற  உறுப்பினா் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா்  பசுபதிபிள்ளை  மற்றும்  மதத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்._MG_3346 copy _MG_3348 copy _MG_3350 copy _MG_3352 copy _MG_3353 copy
Facebook Comments