விஷால் மிகவும் எதிர்பார்த்த சண்டகோழி படத்தின் இரண்டாம் பாகம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர் சண்டகோழி படத்திற்கு ஒதுக்கியிருந்த தேதிகளை, இயக்குனர் மிஸ்கினுக்கு கொடுத்துவிட்டார்.

இந்த படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. “துப்பறிவாளன்” என பெயரிடப்பட்டுள்ளதால், விஷால் டிடெக்டிவாக நடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், விஷால் சமிபத்தில்தான் முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, ஆர்.கே.சுரேஷ் என இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் மே மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Facebook Comments