அறிவிப்பாளர் போட்டியில் நாடாளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம் நாடளாவிய ரீதியிலே இலங்கை முழுவதுமாக ஊடகத் துறையினரால் பாராளுமன்ற அனுசரனையுடன் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறப்பான அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றியுள்ளார்கள். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து கொழும்பு இளைஞர் பாராளுமன்றத்திற்கு குரல் பதிவினை பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.
 .அதனையடுத்து 1ம் 2ம் 3ம் போன்ற இடங்கள் தீர்மானிக்கப்பதற்காக .  இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நடுவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களை தீர்மானித்திருந்தார்கள். அப்போட்டியில்   கிளிநொச்சி  இந்துக்கல்லூரி  மாணவன்  உமாசங்கர்  சங்கீத்  நாடளாவிய  ரீதியில்  முதலாவது  சிறந்த  அறிவிப்பாளராக  தெரிவாகியுள்ளார்
               இது  தொடர்பாக  உமாசங்கர்  சங்கீத்  தெரிவிக்கையில்  நடுவர்களின் மத்தியில் தீர்மானிக்கப்பட்ட குரல் தேர்வில் தகுதியும் குரலிற்கான அடிப்படை பண்புகளோடு நடாத்தப்பட்ட அந்த தெரிவில் பாடசாலை ரீதியில் வயதுக்கட்டுப்பாடு அல்லாத சிறார்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை நடாத்தப்பட்டது.  ஊடகத்தின் பலம் நவீன வசதிகள் கொண்ட இடங்களை விட அழகியல் உணர்வுகளுடன் கூடிய வளர்ச்சி பெற்ற நகரங்களில் உள்ள மாணவர்களின் தொனியினை விட, வட பகுதியில் உள்ள மாணவனாகிய நான் அகில இலங்கை தமிழ் மாணவர்களில் இத் தேர்வில் முதல் மாணவனாக தேர்வுசெய்யப்பட்டதை இட்டு பெரும் மகிழ்வடைகிறேன்
. நான் முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது கல்லூரிக்கும் என் சார் எனை வளர்த்தெடுத்து ஊக்கிவித்த ஆசான்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் என்னுடன் இந்த வாய்ப்பினில் இணைந்து கொண்ட நண்பர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.எனவும்
               எமது நாட்டு ஜனாதியும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமாகிய மேதகு ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீறிசேன அவர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. இதையிட்டு நான் பெரும்மகிழ்வடைகிறேன். நான் அநேகமான போட்டிகளில் பங்கெடுப்பது மிக மிக குறைவு ஆனால்  நான் எனது முதல் பயணத்திலே இந்த நிலையை எட்டியதையடுத்து மிகவும் மகிழ்வடைகிறேன். நான் எனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்கிறேன். அதற்காக நான் முழு மூச்சாக எப்பொழுதும் செயற்படுவேன். இந்த தமிழ் உலகிலே தமிழிற்கான உச்சரிப்பு அந்த தொனிக்கென ஏ.ர் அப்துல் கமீர் உலகலாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அவரளவில் இல்லா விட்டாலும் அவரைப்போன்று  வருவதற்காக   முயற்சிப்பேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர்வடைய எனக்கு கடவுள் தந்த வாய்ப்பினையிட்டு உவகையடைகின்றேன்.    என  தெரிவித்தார்
பாடசாலை  அதிபர்  விக்கினராஜா  அவர்கள்  கருத்து  தெரிவிக்கையில்  வெற்றியை  ஈட்டிய உமாசங்கர்  சங்கீத்  அவருக்கு  எமது  பாடசாலை  சமூகம்  சார்பாக  நன்றியையும்  பாராட்டுக்களையும்  தெரிவிக்கின்றேன்  எனவும்  இவர்  சாதாரண  தர பரீட்சை  எழுதிவிட்டு  உயர்தர  கற்கைகளை  இப்பொழுது  ஆரம்பித்திருக்கின்றார்.  இவர் பாடசாலையில்  நடைபெறுகின்ற  மேடை  நிகழ்ச்சிகளில்  தலைமை ஏற்றும்  பாடசாலை  துடுப்பாட்ட  போட்டிகளில்  நேரடி  வர்ணனையாளராகவும்  தனது  திறமைகளை  வெளிக்காட்டிய  இவர்  இன்று  நாடளாவிய  ரீதியில்  நடத்தப்பட்ட  மாணவர்களுக்கான  அறிவிப்பாளர்  போட்டியில்  வெற்றியீட்டி  உள்ளார்  கிளிநொச்சி இந்துக்கல்லூரியின்  குரலாக  நாடுமுழுவதும்  ஒலிக்கச்செய்துள்ளார்  இவரது  திறமைகளை  மேலும்  வளர்த்து  மேலும்  சாதிக்க  வாழ்த்துகிறேன்  என  தெரிவித்தார்
எஸ் . என் நிபோஜன் img1457056753956 _MG_3456 _MG_3448 _MG_3438
Facebook Comments