கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதே பெண்கள் தினத்தை  முன்னிட்டு   நிகழ்வு  ஒன்று  நடைபெற்றது  குறித்த  நிகழ்வு

கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து பால்நிலை சமத்துவத்திற்கான முன்னெடுப்பு எனும் கருப்பொருளில் மாவட்ட அரச அதிபர், மேலதி அரச அதிபர், மேலதிக மாவட்;டச்செயலாளர், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்  அதிகாரிகள்,பெண்கள் என  பெருந்திரளானவர்கள் ஊர்வலமாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தை  சென்றடைந்து அங்கு நிகழ்வுகளும்  பல்வேறு முயற்சிகளில் சிறந்த பெண்களாக தெரிவு செய்யப்பட்வர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
 
இன்  நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம்   பிரதம அதிதீயாக கலந்து கொண்டு உரையாற்றும் போது
நடந்து முடிந்த யுத்தத்தின் பாதிப்புகள் வடக்கு கிழக்கில் அதிகளவு பெண்களை பாதித்துள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் அதன் பாதிப்பு மேலும் அதிகமாக  காணப்படுகிறது. அதனால்தான் இந்த மாவட்டத்தில் 7061 பெண் தலைமைத்துவ குடும்பங்களும்,1460 மாற்று வலுவுள்ள பெண்களும் காணப்படுகின்றனர்
மேற்படி எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  பாதிப்புக்குள்ளான பெண்கள் இருப்பது இந்த மாவட்;டத்திற்கு உள்ள மிகப்பெரிய பொறுப்பு  இந்த தொகையில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பெண்களின் தொகையே அதிகம். எனவே இவர்களுக்கான பொருத்தமான வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்கி அவர்களின் பொருளாதார மேம்மாட்டுக்கு வழி சமைக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனக்குறிப்பிட்ட அவர் இன்றைய நிலைமையில்  பெண்கள் சமூகத்தில் ஒரு சமத்துவமான  நிலையை அடைந்துகொண்டிருப்பதனை  எம்மால் அவதானிக்க முடிகிறது. இருந்த  போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் சமூகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே வன்முறைகள் அற்ற பெண்களுக்கான சூழல் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். அத்தோடு அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க ஆண்கள் அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்._MG_3407 _MG_3410 _MG_3426 _MG_3430 _MG_3435
Facebook Comments