வடமாகாண  சபையின்  அனுசரணையுடன்  இன்று  கிளிநொச்சியில்  நடத்தப்பட்ட  ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில் வடமாகாணத்தில்  ஆண்கள்  பிரிவில்  மாவட்ட  ரீதியாக   கிளிநொச்சி முதலிடம்  பெற்றுள்ளது  அத்தோடு  பெண்கள்  பிரிவும்   வடமாகணத்தில் மாவட்ட  ரீதியாக இரண்டாம்  இடத்தை  பெற்றுள்ளது

 
குறித்த ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில்     வீராங்கனைகள்  ரீதியில்   வடமாகாணத்தில் முதல் நிலையை  கிளிநொச்சியை  சேர்ந்த  தேவதாஸ்  டென்சிகா வும்  இரண்டாம்  இடத்தை கிளிநொச்சியை  சேர்ந்த எஸ் . தமிழினியும் மூன்றாம் இடத்தை முல்லைத்தீவை சேர்ந்த  எஸ். விதுசாவும்  பெற்றுக்கொண்டனர்
 வீரர்கள் சார்பாக  வவுனியாவை  சேர்ந்த  குமார்  நவநீதன்  முதாலாம்  இடத்தையும்   முல்லைத்தீவை  சேர்ந்த  ஜெனந்தன்  இரண்டாம்  இடத்தையும்  கிளிநொச்சியை  சேர்ந்த அனுஜன்  மூன்றாம்  இடத்தையும்  பெற்றுக்கொண்டனர்
மாவட்ட  ரீதியாக  ஆண்கள்  பிரிவில்  இரண்டாம்  இடத்தை  வவுனியா  மாவட்டமும்  பெண்கள்  பிரிவில்  முதலாம்  இடத்தை  முல்லைத்தீவு  மாவட்டமும்  பெற்றுக்கொண்டது 
 
இன்று  காலை  6.30  மணியளவில்  கிளிநொச்சி  பழைய கச்சேரிக்கு  அருகாமையில்  வடமாகாண  கல்வி மற்றும்  விளையாட்டு  பண்பாட்டலுவல்கள்  அமைச்சர்  குருகுலராஜாவினால்  ஆரம்பித்து  வைக்கப்பட்ட  இவ்  ஊரைத்தாண்டி  ஓடும்  போட்டியில்   
அங்கிருந்து  வீரர்கள்  கிளிநொச்சி  மகாவித்தியாலயம்  ஊடாக   வட்டக்கச்சி பிரதான  வீதி வரை  சென்று  வயல்கள்  மற்றும்  வாய்க்கால்  பதைகளிநூடு  கரடிப்போக்கு  சந்திக்கு  வருகைதந்து  மீண்டும்  கிளிநொச்சி  பழைய  கச்சேரியை   வந்தடைந்தனர் வீரன்களைகளும்  வட்டாக்கச்சி பிரதான  பாதையில் வைத்து  கிளிநொச்சி  மாவட்ட  மேலதிக அரசாங்க  அதிபர் சத்தியசீலனால்  ஆரம்பித்து  வைக்கப்பட்ட  இவ்  போட்டியில்  வீராங்கனைகளும்  அப்பதையிநூடு  வந்து  கிளிநொச்சி பழைய  கச்சேரியை  அடைந்தனர்
வெற்றி ஈட்டிய  வீர , வீராங்கனைகளுக்கு பதக்கங்களும்  பணப்பரில்சில்களும்  வழங்கி  கௌரவிக்கப்பட்டது
வெற்றி  ஈட்டிய  இவ்  வீரவீரங்கனைகள் ஒன்பதாவது  தேசிய  விளையாட்டு  விழாவில்  பங்கு பற்ற  உள்ளார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது   
 
குறித்த போட்டிக்கு  கிளிநொச்சி ,மன்னார்,முல்லைத்தீவு ,வவுனியா  யாழ்ப்பாணத்தை  சேர்ந்த  வீர  வீராங்கனைகள்  பங்கு  பற்றி இருந்தனர் 
 
_MG_3458 _MG_3469 _MG_3535 _MG_3539 vlcsnap-2016-03-12-16h37m51s218 vlcsnap-2016-03-12-16h38m15s235 vlcsnap-2016-03-12-16h38m31s153 vlcsnap-2016-03-12-16h39m05s211எஸ் . என் , நிபோஜன் 
Facebook Comments