கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாதன் குடியிருப்பு மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி நாதன் குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று  திங்கட்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.

கண்டாவளை – நாதன் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 313 குடும்பங்களுக்கு கடந்த 40 வருடங்களுக்குப் பின்னர் நேற்று  194 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

எஞ்சியுள்ள  உள்ளோருக்கு அடுத்த கட்டத்தில் வழங்கப்படும் என்றும் 123 குடும்பங்களின்  பதிவுகளுக்காக   காணிக் கச்சேரி  ஒன்று நடைபெற  இருப்பதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது, கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.     IMG_3598 IMG_3613 IMG_3631 IMG_3632 IMG_3646 IMG_3649

Facebook Comments