யாழ்ப்பாணம் – தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பேரூந்து எழுதுமட்டுவாழ் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திருப்புகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பேரூந்துடன் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மினி பேரூந்து குடைசாய்ந்துள்ளதோடு, அதன் சாரதி மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.fa94c99215b0bcd3323de746ceb64c9046ff556a6a292bc6e90a5c8a95e7842a 11c1bfd7b5d2ddd4e9c7bfdde0702b6f4b51b9c0e74ee262346fc8e52d549f16 1a2d9f66034a9dcb63c24adaf3f8895720a1e3f0a29539f2889b2e9a06f30762 2326265170d263acd088388a059c2d3d2ba1be983d0764c9c64cc43ae11a0fb4

Facebook Comments