கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில்  கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார்  என்ற சந்தேகத்தில்     கிளிநொச்சி பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 தனிமையில்  இருந்த அதிபர் குறித்த ஒன்பதாம் ஆண்டு மாணவியை தனது மடியில் இருத்தி பெண்களுக்குரிய உடல் அங்கங்களை பிடித்து வருடியதோடு முத்தமும் கொடுத்தார்  என  தெரிவிக்கப்படுகிறது
 இன்று புதன் கிழமை பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஒன்று திரண்டதோடு பொலீஸாருக்கும் தகவல் அனுப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்குப்  பின்னர் பாடசாலை அதிபரான சந்தேக நபர்ரை கைது செய்துள்ளனர்.
மேலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் க.முருகவேல்  கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் ஆகியோரும் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்துள்ளனர்.
இச்சம்பவம்  நடைபெற  வாய்ப்புக்கள்  இல்லை  என  பாடசாலை  ஆசிரியர்கள்  மறுப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது
குறித்த  சம்பவம் தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  கிளிநொச்சி  போலீசார்  மேற்கொண்டு  வருகின்றனர்
Facebook Comments