நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு உண்மையை கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய 100 மெகாவோட்ஸ் மின்சார அலகை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கு இன்னும் நான்கு வாரங்கள் பிடிக்கும்.

இந்தநிலையில் மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் ஒரு மணித்தியால மின்சார விநியோகத்தடையை அமுல் செய்யவேண்டும்.

இந்த தீர்மானத்தை எடுக்காதுபோனால், நிலைமையை சமாளிக்க 500 மெகாவோட்ஸ் அலகை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்றும் வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்

Facebook Comments