கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியான கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக பல்வேறு நோய் தாக்கங்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடரும் வெப்பம் காரணமாக மாவட்டத்தின் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றது. இதேவேளை இரணைமடு குளம் புனரமைப்பிற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால், நிலத்தடி நீரின் அளவும் குளத்தை அண்டிய பகுதிகளில் குறைவடைந்து வருகின்றது. விலங்குகள் மாவட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக உணவுக்காக அங்கலாய்கின்றன.

முதலாம் தவணை பரீட்சைகள் ஆரம்பித்தள்ள நிலையில் பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு இடர்ளை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டில் நிலவும் இந்த வெப்ப காலநிலை மேலும் தொடருமாயின் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments