கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள மத்திய வங்கிக்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் பெயர்ப் பலகையில் பல்வேறு எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிழைக்குக் காரணமான அதிகாரிகளின்  இத்தகைய அசட்டையீனமானது, தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்துவது போன்று அமைந்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை மத்திய வங்கி, பிரதேச அலுவலகம் கிளிநொச்சி என்ற சொற்கள் பெயர்ப் பலகையில் கீழ்வரும் சொற்பிழைகளோடு காணப்படுகிறது. பிர(நே)ச அலுவல(ச)ம் கிளி(தொக்)சி

அதேவேளை, குறித்த அலுவலகத்திற்கு செல்லும் தூரம் ஒரு கிலோ மீட்டராக இருக்க, 10 கிலோ மீட்டர் எனவும் அடையாளமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தமிழ் மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், அரச அலுவலகங்களில் தமிழ் மொழி எழுத்து பிழைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்

Facebook Comments