கரைச்சி பிரதேசத்தில் பத்தாயிரத்து 884 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் பத்தாயிரத்து 884 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால இடப்பெயர்வினைத் தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருபத்தி மூவாயிரத்து 278 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இவ்வாறு மீள்குடியேறியுள்ள பத்தாயிரத்து 884 குடும்பங்களுக்கு பல்வேறு அரச சார்பற்ற சிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு வகையான அவர்களது தொழில் முயற்சிகளை கருத்திற்கொண்டு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது மூவாயிரத்து 985 குடும்பங்களுக்கு விவசாயத்திற்கான வாழ்வாதார உதவிகளும் நான்காயிரத்து 920 குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகளும் 165 குடும்பங்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கான வாழ்வாதார உதவிகளும் ஆயிரத்து 814 குடும்பங்களுக்கு கைத்தொழில்களுக்கான வாழ்வாதார உதவிகளும் என பத்தாயிரத்து 884 குடும்பங்களுக்கு இதுவரை வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என கரைச்சிப்பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொண்ட குடும்பங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்ளாத பல குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன

Facebook Comments