கிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப்பிரதேசத்தின் குடிநீர் விநியோக புனரமைப்புத் திட்டம் ஆயிரத்து 940 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த காலயுத்தம் காரணமாக சேதமடைந்த நிலையில் தற்போது இதன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகங்களின் கீழான குடிநீர் விநியோக திட்டங்களில் புனரமைப்பு பணிகள் மேற்படி ஆயிரத்து 940 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இரத்தினபுரம் பகுதியிலும் பரந்தன் குமரபுரம் பகுதியிலும் குடிநீர் விநியோகத்திற்கான பாரிய நீர்த்தாங்கிகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

மேற்படி திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 20 கிராம அலவலர் பிரிவுகளைச் சேர்ந்த நாற்பதாயிரம் பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன் 95 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்திட்டத்திற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் இதன் பணிகளை துரித கதியில் முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய அரசினது ஆயிரத்து 200 மில்லியன் ரூபா நிதியிலும் இலங்கை அரசினது 740 மிலலியன் ரூபா நிதியிலும் என மேற்படி குடிநீர் விநியோகத்திட்டம் ஆயிரத்து 940 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments