கிளிநொச்சி முழங்காவில் தேசியப்பாடசாலையில் மாணவர்களிற்கான உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பொற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பாடசாலையில் சுமார் 1000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும் இவர்களில் 300 மாணவர்கள் வரையில் தளபாட வசதிகள் அற்ற நிலையில் நிலத்தில் இருந்தே கல்வி பயில்கின்றனர்.
இப்பாடசாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிற்கான தேவை காணப்படுகின்றது. அத்துடன் 16 ஊழியர்கள் தேவைப்படும் இப்பாடசாலையில் ஒரு ஊழியரே கடமையில் உள்ளார்.
இப்பாடசாலையின் விளையாட்டு மைதானம் மற்றும் கட்டிடங்கள் என்பன உரிய வசதிகளுடன் காணப்படவில்லை.
எனினும் இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய சந்தர்ப்பத்தில் இது தேசிய பாடசாலை எமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் பெற்றார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் தாம் தெரியப்படுத்தியுள்ளதாவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
Facebook Comments