இனவாதம் பிரிவினைவாதம் பயங்கரவாதம் எதிரிவாதம் இனி வேண்டாம் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய யொன்புரய இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்  
 
அவர் மேலும் தெரிவிக்கையில்
 
இவ்  நிகழ்சிகளுக்கு உங்களை அழைத்தது எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய நல்ல தெரிவு  செயட்பாட்டின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை முன்னேற்றுவதற்காக  எதிர்காலத்தை  உருவாக்குவதற்காக  இதன் பிரதிபலன்களை அனுபவிக்கப்போவவர்கள் நானோ அல்லது ஜனாதிபதியோ அல்லது முதலமைச்சர்களோ அல்லது ஆளுனர்களோ அல்ல அந்த பிரதிபலன் பிரதினன்மைகள் கிடைப்பது  உங்கள் எல்லோருக்கும் என்பதை நான்  நினைவு படுத்துகிறேன் 
 
அந்த வகையிலே  யுத்தத்தின் பிறகு இன பேதம் மத பேதம் எல்லாவற்றையும்  மறந்து ஒருதாய் பிள்ளைகள்  போல் நாம் இலங்கையர்  என்ற  வகையில் நாம் ஒன்றாக   இந்த  நாட்டினை  கட்டி எழுப்புவதற்காகவே  இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
எனதெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில்  சிங்கள தமிழ் முஸ்லீம் அனைவரும் இந்த இடத்தில் ஒன்றுகூடி இருப்பது இலங்கையர் என்ற  அடிப்படையிலையே  எதிர்காலத்தை  பாரம் எடுப்பதற்காக 
 
 நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கியப்பட் தவர்கள் என்ற வகையிலே  நாட்டை   வளர்ச்சி பெறவைப்பதற்காக முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் 

எஸ்  .என்  . நிபோஜன் 

Facebook Comments