கிளிநொச்சி ஏ9 வீதியில் நீதிமன்றம் முதல் கரடி போக்குச் சந்தி வரை பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகள் பெரும்பாலன நாட்களில் காலை பத்து மணி வரை ஒளிர்ந்த வண்ணம் காணப்படுகிறது.

நாட்டில் தற்போது மின்சாரம் பெரும் பிரச்சினைக்குரியதாக காணப்பட்டு வருகின்ற நிலையில், பகல்வேளையில் வீதி விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் ஊடாக  மின்சாரத்தை சேமிக்குமாறும், சிக்கனமாக பயன்டுத்துமாறும்  பணத்சை;  செலவு செய்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் மின்சார சபை தாங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாமை விமர்சனத்திற்குரியதாக காணப்படுகிறது. ஊருக்கு உபதேசம் செய்யும் மின்சார சபை தாங்கள் அவ்வாற நடந்துகொள்ளவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்ற குறித்த  வீதி விளக்குகள்  பெரும்பாலன நாட்களில் காலை பத்து மணி வரை ஒளிர்ந்த வண்ணம் காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்.

வீதி விளக்கு பெருத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் கரைச்சி பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட குறித்த வீதி விளக்குகளுக்குரிய மின் கட்டணத்தை பிரதேச சபை செலுத்த தவறியதனை அடுத்து கடந்த ஜனாதிபதி தேர்தலோடு  முன்னாள் ஜனாதிபதியால் கிளிநொச்சி ஏ9 வீதி விளக்குக்களை  செயற்படுத்தும் அதிகாரம்  மின்சார சபைக்கு வழங்கப்பட்டது.download (1) download (2)

Facebook Comments