கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள தனியாருடைய வயல் காணி ஒன்றை இராணுவ அதிகாரி ஒருவர் விலைக்கு வாங்கி பாரியளவிலான உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

வயல் நிலங்களை மண்ணால் நிரப்பி குடியிருப்பு நிலங்களாக மாற்றக்கூடாது என்கின்ற சட்டத்தைக் கொண்ட கமநல சேவைத் திணைக்களம் பல ஏக்கர் வயல் நிலங்களை மண் கொண்டு மூடுவதற்கு இராணுவ அதிகாரிக்கு அனுமதி அளித்துள்ளது.

நூற்றுக்கணக்கான டிப்பர் வாகனங்களில் வேறு வயல்களில் இருந்து அள்ளப்படுகின்ற மண்கள் குறித்த வயல் காணியில் குவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இதன் பின்னணியில் கிராம மட்ட கமக்கார அமைப்பில் உள்ள ஒரு சிலருடைய உதவிகளும் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இராணுவ அதிகாரி நீர்ப்பாசன வாய்க்காலில் சட்ட விரோதமாக பாலம் ஒன்றை அமைத்து மண் பறிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் கமநல சேவைத்திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே சிங்கப்பூரில் வதிகின்ற ஒருவருடைய வயல் காணியை உரித்தாளர்கள் யாருமற்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிகாரி ஒருவருக்கு சட்டவிரோதமான வகையில் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் அறிய கிடைத்திருக்கின்றது.

இத்தகைய முறைகேடுகள் நடைபெறுகின்ற போது அனுமதி அளிக்கின்ற கமநல சேவைகள் திணைக்களம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வயல் காணி ஓரங்களில் குடியிருந்து வருகின்ற ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அமுல் படுத்துவது குறித்து விவசாய சமூகத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.kili_karadopokku_004 kili_karadopokku_005 kili_karadopokku_006 kili_karadopokku_007

Facebook Comments