கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான பதில்ப் பணிப்பாளர் பணிநிலைக்கான நேர்முகத் தேர்வு எதிர் வரும் 6ம் திகதி இடம்பெறவெள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான பதில்ப் பணிப்பாளர் பணிநிலைக்கான வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதன் பிரகாரம் 05 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

 இவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர் வரும் 6ம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெறவெள்ளது.

பணிப்பாளர்கள் நியமனம் மத்திய அரசிற்கு உட்பட்டது. அவ்வாறு நிரந்தரப் பணிப்பாளர் நியமனம் இடம்பெறுகின்ற காலம் வரையில் பதில்ப் பணிப்பாளரை தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் பதில் பணிப்பாளரை நியமனம் செய்ய முடியும் அதன்பிரகாரம் குறித்த நேர்முகத் தேர்வு இடம்பெறுகின்றது. இவ்வாறு இடம்பெறும் நேர்முகத் தேர்வில் தேர்வாகின்றவருக்கு உரிய முறைப்படி பதில் பணிப்பாளர் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.IMG_4807

Facebook Comments