கிழக்கு மாகாணத்தில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பாட நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் அத்துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 431 மில்லியன் ரூபா
நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 11 பாடசாலைகளில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பாட நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பாடசாலைகளில் தொழில்நுட்ப கூடத்திற்கான புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 340 மில்லியன் ரூபாவும் உபகரண கொள்வனவிற்காக 53 மில்லியன் ரூபாவும் கழிவறை வசதிகளுக்காக 38 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Facebook Comments