சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதனை செய்தியிடச் சென்ற ஊடகவியலாளர் மீது குறித்த நபர்கள்  தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாடு செய்ய சென்ற ஊடகவியலாளரின் முறைப்பாட்டையும் பொலீஸார் ஏற்றுக்கொள்ளாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு கிராமத்தில் சிலர் மக்களின் காணிகள் மற்றும் வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலையடு;த்து அதனை செய்தியிடச் சென்ற தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி செய்தியாளர் மீது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு, உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
கோரக்கண்கட்டு கிராமத்தில் கனரக வாகனங்கள் மூலம் சிலர் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இது தொடர்பில்  பொது மக்கள் பிரதேச செயலகத்திடமும், சில ஊடகவியலாளர்களிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி செய்தியாளர் சம்பவ இடத்திற்குச் சென்ற  போது டிப்பர் வாகனங்கள் சகிதம் சட்டவிரோத மணல் அகழ்வில் சிலர் ஈடுப்பட்டிருந்தனர் இதனை ஒளிப்பதிவு செய்த போதே குறித்த செய்தியாளர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதோடு, ஊடகங்களில் செய்தி வெளிவந்தால் அதன் பின்னர் தாங்கள் யார் என்பதனை காட்ட வேண்டி வரும் எனவும், ஊடகங்களில் செய்தியினை வெளியிட்டுவிட்டு நீ எவ்வாறு கிளிநொச்சி வாழப்போகின்றாய் என்பதனை பார்ப்போம் எனவும் எனவும் மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த செய்தியாளர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத பொலீஸார் சட்டவிரோத மணல் அகழவில் ஈடுபட்டவர்களை அழைத்து ஊடகவியலாளருடன் சேர்த்து பேசுவோம் முறைப்பாடு  தேவையில்லை கூறிவிட்டதாக ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.
சட்டவிரோத மணல் அகழவில் ஈடுப்படுகின்றவர்களை அழைத்து சமரசம் செய்யும் அளவுக்கு  அவர்களுடனான கிளிநொச்சி பொலீஸாரின் உறவு குறித்த பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். சட்டவிரோ மணல் அகழ்வில் ஈடுப்பட்டடவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சமரசம் செய்ய முற்படும் கிளிநொச்சி பொலீஸாரின் நடவடிக்கை பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரதேசம் மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத பிரதேச என்பதோடு, மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களிடம் எந்த அனுமதி பத்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கண்டாவளை பிரதேச செயலாளர் கிராம அலுவலர் ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர்கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டதாக பொத மக்கள்  குறிப்பிடுகின்றனர்._MG_0576[1] _MG_0577[1] _MG_0578[1] _MG_0579[1] _MG_0580[1] _MG_0586[1] _MG_0587[1] _MG_0598[1]
Facebook Comments