கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர் சங்கங்களுக்கு தொழில்சார் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே மற்றும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதின்மூன்று சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது புதிய 44 மீன்பிடி குள்ளாக்கள், 35 திருத்தப்பட்ட குள்ளாக்கள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன சங்கங்கங்களிடையே வழங்கப்பட்டுள்ளது.

 

Facebook Comments