வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது. மாவட்டத்தின் மீள்குடியேற்றம் அதன் பின்னரான அபிவிருத்தி மக்களின் தேவைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளை ஆராயும் வகையில் ஆளுநரால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், 4 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு விடயங்களை ஆளுநருக்கு தெளிவுபடுத்தினர். வடமாகாண ஆளுநராக ரெஜினால்ட் குரே பொறுப்பேற்றப் பின்னர் கிளிநொச்சியில் நடத்துகின்ற முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. – IMG_5568 IMG_5569 IMG_5574 IMG_5582

Facebook Comments