வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலானது, வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், முகாமையாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கூட்டுறவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவசாய அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன், இது குறித்து வடமாகாண சபையின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 

Facebook Comments