கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்   கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலின் அடிப்படையில்   , குறித்த  பகுதிக்குச் சென்ற கிளி நொச்சி  பொலிஸ் மதுஒழிப்பு  பிரிவினர், வாகனங்களை சோதனை செய்தபோது முச்சக்கர வண்டி ஒன்றில் கொழும்புக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட  இவரைக் இன்று 7.30 மணியளவில் உருத்திரபுரம்  எள்ளுக்காடு பகுதியில் வைத்து  கைதுசெய்துள்ளனர்.

உருத்திரபுரம்  எள்ளுக்காடு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 29 வயதான சந்தேகநபரிடமிருந்து 805 கிராம்  கஞ்சாபொதி மற்றும் 2055 கிராம்கஞ்சா பொதி  ஆகிய இரண்டு பொதிகள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது

பொலிசாரின் முதலாம் கட்ட  விசாரனைகளில்  கைதுசெய்யப்பட்டவர்  யாழ்ப்பானம் பண்டத்தைரிப்பை சேர்ந்த  29 வயதான  ஈஸ்வரன் தீபன் எனவும்  மற்றும்  D8 உருத்திரபுரம் கிளி நொச்சியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சசீதரன் எனவும் தெரிய வருவதொடு பிரதான சந்தேக நபரான  தீபன் என்பவருக்கு கஞ்சா தொடர்பான முறைப்பாடுகள்  யாழ்  பொலிஸ் நிலையத்திலும்  இருப்பதாகவும் தெரிய வருகிறது

இந்நிலையில், சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளி நொச்சி  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவான இளைஞர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பின்னர் பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக இன்று  காலையும் கிளிநொச்சி கிஸ்னபுரம் பகுதியிலும்   இரண்டு இளைஞர்கள் 10 கிராம்  கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments