கிளி­நொச்சி மாவட்­டத்தில் மிகவும் பின் தங்­கிய கிரா­மங்­களில் சட்­ட­வி­ரோத கசிப்பு உற்­பத்தி அதி­க­ரித்துள்ளன. குறிப்­பாக கிளி­நொச்சி மாவட்­டத்தின் ஆனை­வி­ழுந்தான், வன்­னே­ரிக்­குளம், கல்­ம­டு­நகர், வட்­டக்­கச்சி, தர்­ம­புரம் கல்­லாறு, புன்­னை­நீ­ராவி, திரு­வை­யாறு,ஊரியான், கோரக்­கன்­கட்டு ஆகிய பகு­தி­க­ளிலும் சட்­ட­வி­ரோத கசிப்பு உற்­பத்தி, விற்­ப­னைகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன.
இவ்­வாறு கசிப்பு உற்­பத்தி விற்­ப­னைகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தனால் மேற்­கு­றித்த கிரா­மங்­களில் பல்­வேறு வகை­யான குற்­றச்­செ­யல்கள் இடம்­பெற்று வரு­வ­துடன் கூடு­த­லான சிறு­வர்கள் கசிப்பு மற்றும் போதைப்­பொருள் பாவ­னை­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். குறித்த கிரா­மங்­களில் கடந்த காலங்­களில் குறை­வாக காணப்­பட்ட மேற்­படி சட்­ட­வி­ரோத கசிப்பு உற்­பத்தி, விற்­ப­னை தற்­போது அதி­க­ரித்துக் காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Facebook Comments