தல அஜித்தின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கடந்த வாரத்திலிருந்தே பல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் காமென் டிபி, தினமும் ட்ரண்டிங் என கலக்கி வருகின்றனர்.

இது மட்டுமின்றி பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்இசையில் தல ஆந்தம் (Thala Anthem) ரெடியாகி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை சுமார் 100 திரையரங்குகளில் தல பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு இத்தனை திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோ திரையிடுவது இதுவே முதன் முறை.

பல இடங்களில் இன்று இரவே ஸ்பெஷல் ஷோ தொடங்குகின்றது, மேலும், இரத்ததானம், அன்னதானம் என சமூக பணிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Facebook Comments