முன்னைய அரசாங்கத்திற்க்கும் தற்ப்போதய அரசாங்கத்திற்க்கு பெரிதாக வித்தியாசம் இல்லை என வடக்கு மாகாண விவசாய மற்றும் கூட்டுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இன்று வடமாகாண கூட்டுறவாளர் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கம் இணைந்து கிளிநொச்சியில் நடாத்திய வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதின  நிகழ்வில் சிறப்புரை ஆற்றூம் போதே அவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் தனியார் துறையை ஊக்குவிக்கின்ற முதலாளிகளின் பக்கமே எப்போதும் சிந்திக்கின்ற அரசாங்கமாக இந்த நல்லாட்சி அரசாங்கம் இருக்கின்றது.எனவும்  வடமாகாண சபை எதிர்வரும் மே15ம் திகதி மற்றுமொரு நூறு நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி
தொழில்சங்கங்கள் மற்றும் கூட்டுறவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துக்கொண்டார்.
தொடந்து தெரிவிக்கையில் கூட்டுறவு அமைப்புக்குள் அரசியல் செல்வாக்குடன் தவறு செய்யும் சந்தர்பத்தில் அந்த குற்றம் பொதுச்சபைக்குள் வரும்போது மன்னிக்கப்பட்டு விடுவதாகவும் தெரிவித்தார். கூட்டுறவு துறையில் இருப்பவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் கட்சிசார்ந்த சிந்தனையில் இருப்பவர்களையும் கூட்டுறவு துறையினர் ஆதரித்தால் அது இறுதியிமுறைகேடாக அமையும் என்றார்.
கூட்டுறவுத்துறை பல சவால்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதனை மீளவும் கூட்டுறவுத்துறையை சிறப்பாக நிமிர்த்துவதற்க்கு பல்வேறு செயற்ப்பாடுகளை  வடக்கு மாகாணசபை முன்னெடுத்து வருவதாகவும் ஆனால் அரசியல் விடுதலையில் எந்த அபிவிருத்தியும் சாத்தியமில்லாத ஒன்றாக அமைந்திருப்பதாக கவலை தெரிவித்து விடுதலை புலிகளின் காலத்தில் கூட்டுறவு அமைப்பானது எந்த ஒரு குறைபாடுகளும் இன்றி நேர்த்தியாக இடம்பெற்றதாகவும் ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறான நிலை இல்லை எனவும் குறிப்பிட்டு தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

Facebook Comments