உகண்டாவின் கம்பாலா நகரில் உள்ள இலங்கை உணவகம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியை தமது உணவகத்திற்கு காலை உணவு விருந்திற்கு வருகை தருமாறு உணவகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்குபண்டார உள்ளிட்டோரும் உணவகத்திற்கு சென்றிருந்தனர்.

உகண்டாவின் ஜனாதிபதியாக 6 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட முசவேனியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றிருந்ததுடன் இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments